ரயில் பயணத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் CPR சிகிச்சை அளித்து கணவரின் உயிரை காப்பாற்றிய மனைவி

Oct 3 2022 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரயில் பயணத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டதால், CPR சிகிச்சை அளித்து கணவரின் உயிரை மனைவி காப்பாற்றிய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியிலிருந்து கோழிக்கோடுக்கு சென்ற ரயிலில் கேசவன் என்பவரும், அவரது மனைவி தயா என்பவரும் பயணம் செய்தனர். ரயில், உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே சென்று கொண்டிருந்த போது கேசவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் மதுரா ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி கேசவனை கீழே இறக்கினர்.

அப்போது கேசவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், ரயில்வே போலீஸார் அவரது மனைவியிடம் CPR முதலுதவி சிகிச்சை அளிக்க கூறினர். அதன்படி அவர்களின் உதவியுடன் கேசவனுக்கு அவரது மனைவி முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால் கேசவன் சீராக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க‍ப்பட்டார்.

கணவருக்கு சரியான நேரத்தில் CPR சிகிச்சை செய்ய அறிவுறுத்திய போலீசாருக்கு மனைவி நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00