தேசப்பிதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை - சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்றார் குடியரசுத் தலைவர்
Oct 3 2022 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, ராட்டையில் நூல் நூற்றார்.
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, அகமதாபாத் நகரில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு இன்று காலை சென்றார். ஆசிரம வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள ராட்டையில் அவர் நூல் நூற்றார்.
சபர்மதி ஆசிரமத்திற்கு, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவுடன், குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர பட்டேல், அம்மாநில ஆளுநர் திரு. ஆச்சார்ய தேவ்ரத் ஆகியோர் உடன் சென்றனர்.