உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு - விமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நம்பிக்கை

Oct 3 2022 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்‍கப்பட்டன. இதன் மூலம் விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்களை, திரு. ராஜ்நாத் சிங் நாட்டுக்‍கு அர்ப்பணித்தார். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்‍கப்பட்டுள்ள இலகு ரக ஹெலிகாப்டர்கள், 5.8 டன் எடையில், இரட்டை என்ஜின்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கெனவே பல்வேறு ஆயுதங்கள் வெற்றிகரமாகப் பொருத்தி பரிசோதிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய திரு. ராஜ்நாத் சிங், இலகுரக ஹெலிகாப்டர்கள், விமானப்படையின் தாக்‍கும் திறனை அதிகப்படுத்தும் என்றும், விமானப்படையின் பலத்தை அதிகரிக்‍கும் என்றும் தெரிவித்தார். இந்த ஹெலிகாப்டர்களில், இரவிலும் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்த முடியும் என்றும், அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்த முடியும் என்றும், மெதுவாகப் பயணிக்கும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றைக் கூட தாக்க முடியும் என்றும் விமானப்படை அதிகாரிகள் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00