இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரம் அளவுக்கு குறைந்தது : கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் மரணம் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
Oct 3 2022 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 97 ஆயிரத்து 498-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 701-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 36 ஆயிரத்து 126 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 671 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 301 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 218 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 75 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.