மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் -உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
Oct 3 2022 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு.முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து பிரதமர் திரு.மோடி கேட்டறிந்தார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான திரு.முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமானதால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரு. முலாயம் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு புற்றுநோய் மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திரு.முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகனும், சமாஜ்வாடி தலைவருமான திரு.அகிலேஷ் யாதவிடம் பிரதமர் திரு.மோடி கேட்டறிந்துள்ளார். அப்போது, சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் திரு.ராகுல்காந்தி, திருமதி.பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களும் திரு.முலாயம் சிங் யாதவின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.