செவ்வாய் கிரகத்தை கடந்த 8 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த மங்கள்யான் விண்கலம் -செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Oct 3 2022 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

செவ்வாய் கிரகத்தை கடந்த 8 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த மங்கள்யான் விண்கலம் செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக 450 கோடி ரூபாய் மதிப்பில், இந்தியாவில் மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்தது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1ம் தேதி புவி ஈர்ப்பு பரப்பை மங்கள்யான் விண்கலம் கடந்து சென்றது. 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.

இந்த நிலையில் அதன் செயல்பாடு நின்றுள்ளதாகவும், இதன் மூலம் மங்கள்யான் விண்கலம் விடை பெற்று கொண்டதாகவும், இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மங்கள்யான் விண்கலத்தில் எரிபொருள் காலியாகிவிட்டதாகவும், அதன் பேட்டரியும் செயலிழந்துவிட்டதாகவும், அந்த விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளனர். மங்கள்யான் விண்கலம் தனது பணியை சிறப்பாக செய்துள்ளதாகவும், அறிவியல் பூர்வ தகவல்களை வழங்கி உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00