டெல்லி மற்றும் சுற்றுப் புறங்களில் தொடரும் கனமழை - போக்‍குவரத்து நெரிசல்; குர்குவான் பகுதியில் பொதுமக்‍கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற போலீசார் வலியுறுத்தல்

Sep 23 2022 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி மற்றும் சுற்றுப் புறங்களில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ள நிலையில், குர்குவான் பகுதியில் உள்ள அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்ற காவல் துறை வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் பலமணிநேரம் பெய்த கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்‍காடாகக்‍ காட்சியளிக்‍கிறது. இதனால் போக்‍குவரத்து பெரிதும் பாதிக்‍கப்பட்ட நிலையில், டெல்லி போலீசார் ட்விட்டர் மூலம் போக்‍குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை பதிவிட்டனர். அதனடிப்படையில் பயணங்களை மேற்கொள்ள பொதுமக்‍களுக்‍கு காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதே போல் குர்குவான்- நரசிங்பூர் சாலையிலும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடியதால் கடுமையான போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, டெல்லி மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் கனமழை வரை பெய்யக்‍கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, குர்குவான் பகுதியில் வேலைக்‍குச் செல்பவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00