டெல்லி செங்கோட்டையில் நாளை மூவர்ணக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மோடி - செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

Aug 14 2022 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி, சிறப்புரையாற்றவுள்ள நிலையில், அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நாளை டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியேற்றி பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். இதன் காரணமாக, செங்கோட்டையை சுற்றிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ராணுவமும் டெல்லி காவல்துறையும் மேற்கொண்டுள்ளன.

செங்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பட்டம், ஆளில்லா விமானம், ராட்சத பலூன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்‍கப்பட்டுள்ளது. வான்வழி தாக்குதல்களை தடுக்கும் விதமாக, உயரமான இடங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்டம், பலூன் உள்ளிட்டவை பறப்பதை கண்காணிக்க பட்டம் விடுபவர்களையே கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் பிரத்யேகமாக பணியமர்த்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00