நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் - பதவியேற்ற பின் முதல் முறையாக உரையாற்றுகிறார் திரௌபதி முர்மு
Aug 14 2022 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று உரையாற்றுகிறார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் திங்கள்கிழமையான நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக கடந்த மாதம் 25 ஆம் தேதி பதவியேற்ற திருமதி. திரௌபதி முர்மு முதல் முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.