தேச நலனுக்கான ஒவ்வொரு முடிவுக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு : பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

Jul 3 2022 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேச நலனுக்கான மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவையும், காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பதை வழக்‍கமாக கொண்டுள்ளனர் என அசாம் மாநில முதலமைச்சர் திரு. Himanta Biswa Sarma குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் நகரில் இன்று 2வது நாளாக நடந்து வரும் தேசிய செயற்குழு கூட்டத்தில் அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்துகொண்டு பேசினார். அப்போது, தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் பொருளாதார தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும், 2வது நாளில் கொண்டு வரப்பட்ட அரசியல் தீர்மானம் விவாதத்திற்கு பின்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

குஜராத் கலவரம் தொடர்பாக அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்‍காட்டினார். காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் வேண்டும் என்பதற்காக அக்கட்சியினர் போராடி வருவதாகவும், ஆனால் அச்சத்தினால், கட்சி தலைவரை அவர்கள் தேர்வு செய்யாமல் உள்ளனர் எனவும் அவர் விமர்சித்தார். காங்கிரஸ் கட்சிக்‍கு பிரதமர் மோடியை கண்டு அச்சம் ஏற்பட்டுள்ளதால், தேச நலனுக்கான மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு முடிவையும் காங்கிரசார் எதிர்க்கிறார்கள் என்றும் திரு. Himanta Biswa Sarma குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00