கோத்ரா ரயில் எரிப்பு வழக்‍கில் 19 ஆண்டுகளுக்‍குப் பின் கைது செய்யப்பட்டவருக்‍கு ஆயுள் தண்டனை- கோத்ரா அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Jul 3 2022 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு 19 ஆண்டுகளுக்‍குப் பின் கைது செய்யப்பட்ட Rafiq Hussain Bhatuk என்பவருக்‍கு ஆயுள் தண்டனை விதிக்‍கப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா அருகே சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலில் கரசேகவர்கள் பயணம் செய்த இரு பெட்டிகளுக்‍கு தீ வைக்‍கப்பட்டது. இந்த சம்பவத்தில் கரசேவகர்கள் 59 பேர் எரித்துக்‍கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியர்களுக்‍கு எதிராக மிகப்பெரிய வன்முறை நடந்தது. இதில் ஆயிரக்‍கணக்‍கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டையே உலுக்‍கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக்‍ ஹுசைன் பதுக் என்பவர் அச்சம்பவத்திற்குப் பின் தலைமறைவானார். ரயில் எரிப்பு சதித்திட்டம் தீட்டியதாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பபட்ட அவரை 19 ஆண்டுகளுக்‍குப் பின் கடந்த ஆண்டு கோத்ரா போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் இறுதியில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00