பாகிஸ்தானிலிருந்து தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 வயது குழந்தை : குழந்தையை பத்திரமாக பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்த இந்திய வீரர்கள்
Jul 2 2022 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானிலிருந்து தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 வயது குழந்தையை இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து நேற்று இரவு 3 வயது குழந்தை ஒன்று இந்திய எல்லைக்குள் தவறுதலாக வந்துவிட்டது. இதனைக் கண்ட ஃபெரோஸ்பூர் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள், நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 7.15 மணிக்கு இந்திய எல்லைக்குள் வந்த குழந்தை, இரவு 9.45 மணிக்கு பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக, எல்லை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.