நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் : அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
Jun 28 2022 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 793 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
96 ஆயிரத்து 700 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.