எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்
Jun 28 2022 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். நீட் தேர்வுக்கான விரிவான பாடத் திட்டத்தை 3 மாதங்களுக்குள் எவ்வாறு படித்து முடிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்த அவர்கள், பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வான CUET, பொறியியல் நுழைவுத் தேர்வான JEE என அடுத்தடுத்து போட்டித் தேர்வுகள் நடைபெறுவது மாணவர்களை கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்தநிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதேபோல், அடுத்த மாதம் 15-ம் தேதி CUET தேர்வும், அடுத்த மாதம் 21-ம் தேதி JEE தேர்வும் திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.