அசாமில் வெள்ள பாதிப்பு தொடர்வதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்‍கித்தவிக்‍கும் மக்‍கள் - 5 நாட்களுக்‍கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீடுகள் தோறும் வினியோகம்

Jun 28 2022 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாமில் கொட்டிய கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து, வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்‍கித்தவிக்‍கும் மக்‍களுக்‍கு, 5 நாட்களுக்‍கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, அம்மாநில அரசு, பாதிக்‍கப்பட்டவர்களின் வீடுகளுக்‍கே சென்று இலவசமாக வழங்கி வருகிறது.

அசாம் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர்மழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இதனிடையே, வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல், வெள்ளப்பகுதிகளில் உள்ள மக்‍களுக்‍கு, அசாம் அரசு வீடுகளுக்‍கே சென்று அத்தியாவசிய பெருட்களை வழங்கி வருகிறது. முதலில் 3 நாட்களுக்‍கு தேவையான பொருட்கள் அளிக்‍கப்பட்டதாகவும், தற்போது 5 நாட்களுக்‍கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், வீடுகளுக்‍கே சென்று இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அசாமில் 50 லட்சம் மக்‍கள் வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 120-க்‍கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00