தெலங்கானாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு - பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் இல்லை என்ற வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி
Jun 28 2022 7:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் பெட்ரோல்-டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாட நிலவுகிறது. எண்ணெய் நிறுவனங்களில் இருந்து குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில், எரிபொருள்கையிருப்பு இல்லை என்ற வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக, பல இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குக்கள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.