சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்திக்கு மாற சர்வதேச சோலார் தயாரிப்பு அமைப்புகள் முன்வர வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
Jun 27 2022 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்திக்கு மாற சர்வதேச சோலார் தயாரிப்பு அமைப்புகள் முன்வர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க சென்ற அவர், முனிச் நகரில் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், தற்போது நிலவும் 4-வது தொழிற்புரட்சியில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துவதாக பெருமிதம் தெரிவித்தார். இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.