திரைப்படங்கள், தொலைக்காட்சி, ரியாலிட்டி ஷோக்களில், 3 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது - தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவு

Jun 25 2022 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

குழந்தைகள் பங்கேற்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி, ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்தும் வரைவு வழிகாட்டுதல்களை, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் வெளியிட்டது. இதன்படி, 3 மாதத்துக்குட்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகளை தொலைக்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தும் போக்கு அதிகரித்துத வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எந்தவொரு குழந்தையும் ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தக்‍கூடாது - தாய்ப்பாலூட்டுதல் மற்றும் நோய்த்தடுப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளில் மூன்று மாதங்களுக்குக் குறைவான குழந்தை அனுமதிக்கப்படாது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக் கலைஞர்களை கேலி, அவமானம் அல்லது துன்புறுத்தும் எந்த நிகழ்zச்சியிலும் பங்கேற்க வைக்க கூடாது என்றும், இந்த விதிகளை மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 1976 கொத்தடிமைத் தொழிலாளர் முறை சட்டம் அல்லது அதன் அடிப்படையில், எந்த ஒப்பந்தத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்‍கூடாது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் இருக்‍கும் அனைவரும் மருத்துவத் தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் - சிறார் நீதிச் சட்டத்தின்படி குழந்தைகள் மது அருந்துவது, புகைபிடிப்பது அல்லது வேறு எந்தப் பொருளையும் பயன்படுத்த அனுமதிக்‍கக்‍கூடாது உள்ளிட்ட அம்சங்கள், வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00