முதலமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும்; நேர்மையும், மக்களின் அன்பும் மட்டுமே உடன்வரும் - உத்தவ் தாக்கரே

Jun 23 2022 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும். ஆனால் நேர்மையும், மக்களின் அன்பும் மட்டுமே உடன் வரும் என்று சிவசனோ தலைவரும், மஹாராஷ்ட்ரா முதலமைச்சருமான திரு. உத்தவ் தாக்‍கரே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனா வசம் இருந்த 55 எம்.எல்.ஏக்‍களில், தற்போது 15 பேர் மட்டுமே முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍கரேவுடன் உள்ளதாகக்‍ கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்று இரவு, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து திரு. உத்தவ் தாக்‍கரே வெளியேறினார். அதற்கு முன்னதாக மக்‍களிடம் காணொலி மூலம் பேசிய அவர், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தேவைப்பட்டால் கட்சித் தலைவர் பொறுப்பையும் துறக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். தனக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல என்றும், அரசியல் சாசனம் காப்பாற்றப்படுகிறதா என்பதே முக்‍கியம் என்றும் தெரிவித்தார். பேரம் நடத்த தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரைகள் அல்ல என்றும், முதலமைச்சர் பதவி இன்று வரும் நாளை போகும் என்றும் கூறினார். நேர்மையும், மக்களின் அன்பும் மட்டுமே உடன்வரும் என்று திரு. உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00