கொல்கத்தாவில் உள்ள தனியார் திரையரங்கில் பயங்கர தீவிபத்து - உயிர்சேதம் ஏற்படவில்லை
Jan 18 2022 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவில் உள்ள திரையரங்கில் திடீரென ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.