பொதுமக்கள் பொது இடங்களுக்கு வர கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் வரும் 31ம் தேதி விசாரணை

Jan 18 2022 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் சில மாநிலங்களில் பொது இடங்களுக்‍கு வர கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்‍கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு வரும் 31-ம் தேதி விசாரணைக்‍கு வரவுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் தற்போது வரை 158 கோடிக்‍கும் அதிகமான டோஸ் தடுப்பசி செலுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சிலர் தடுப்பூசி போட்டுக்‍கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதனிடையே திரையரங்கம், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்‍கு செல்ல தமிழகம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்‍கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பொது இடங்களுக்கு வர கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்ற மூத்த வழக்‍கறிஞர் திரு. பிரசாந்த் பூஷன் சார்பில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிக்கை வைக்‍கப்பட்ட நிலையில், வரும் 31-ம் தேதி விசாரணைக்‍கு எடுத்துக்‍கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00