ஐஐடி அட்வான்ஸ் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு : டெல்லியை சேர்ந்த மாணவர் முதலிடம்

Oct 15 2021 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐஐடி அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்‍கின்றன. இதில் டெல்லியை சேர்ந்த மாணவர் மிருதுள் அகர்வால் முதலிடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இந்த ஆண்டு 4 முறை ஐஐடி மெயின் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு தேர்விலும் 6 லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் தேர்வு ​செய்யப்பட்டு அவர்களுக்‍கு கடந்த 3 ஆம் தேதி அட்வான்ஸ் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 699 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 862 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மொத்தம் உள்ள 360 மதிப்பெண்களில் 348 மதிப்பெண்களை பெற்ற டெல்லியைச் சேர்ந்த மாணவர் மிருதுள் அகர்வால் முதலிடம் பெற்றார். ​மாணவிகள் பிரிவில் டெல்லியைச் சேர்ந்த காவ்யா சோப்ரா என்ற மாணவி 286 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00