பாகிஸ்தான், பங்களாதேஷை விடவும் இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்‍கை அதிகரிப்பு - மத்திய அரசுக்‍கு எதிர்க்‍கட்சிகள் கடும் கண்டனம்

Oct 15 2021 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதற்கு, மத்திய அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து ஆண்டுதோறும் உலக பட்டினி‍ குறியீடு வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்‍கான உலக பட்டினிக்‍ குறியீடு அறிக்‍கையில், இந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் இடம் பெற்றுள்ள 116 நாடுகளில், இந்தியா 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளை விடவும் இந்தியா பின் தங்கியுள்ளது. இந்தியாவுக்‍கு அடுத்த இடத்தில், பப்புவா நியூ கினியா, அஃப்கானிஸ்தான், நைஜிரியா, காங்கோ, மொசாம்பிக், சோமாலியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அதேநேரம், சீனா, பிரசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்பட்டிருந்தாலும், சத்துணவு, சரிவிகித உணவு கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிப்பதாக அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதற்கு மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்‍கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பசி, வறுமையை ஒழித்த பிரதமர் திரு.மோடிக்கு வாழ்த்துகள் என்று கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00