ஹரியானாவில் விவசாயிகள் போராட்டக்களத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் - பலியானவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்

Oct 15 2021 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக ஹரியானாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்ட களத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானாவின் சோனிபட் குந்தலி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்றுவரும் இடத்தில், கை, கால்கள் துண்டிக்‍கப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் தூக்‍கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 5 மணி முதல் உடல் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும், அந்த நபர் யார், கொன்றது யார்? என்பன குறித்தெல்லாம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அம்மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹன்ஸ்ராஜ் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் லக்‍கிம்பூர் கெரி பகுதியில், விவசாயிகள் மீது கார் ஏற்றிக்‍ கொல்லப்பட்ட சம்வத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், ஹரியானாவில் விவசாயிகளின் போராட்ட களத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00