ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களை புதுப்பிக்‍க வரும் 31-ம் தேதியே கடைசி நாள் : மாநில அரசுகளுக்‍கு சுற்றறிக்‍கை அனுப்பியது மத்திய அரசு

Oct 15 2021 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நெருக்‍கடியால் புதுப்பிக்‍கப்படாமல் உள்ள வாகன ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புத்துப்பிக்‍க வரும் 31-ம் தேதியே கடைசி நாள் என மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு, தனியார் என அனைத்துத் துறைகளிலும் பணிகள் பாதிக்‍கப்பட்டன. எனவே, வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு, வாகனப்பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்‍க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை 7 முறை அவகாசம் நீட்டிக்‍கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 31-ம் தேதிக்‍குள் ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்‍க வேண்டும். இந்நிலையில், வாகன ஆவணங்களை புதுப்பிக்‍க, வரும் 31-ம் தேதிக்‍கு பின் அவகாசம் நீட்டிக்‍கப்படாது என்று, அனைத்து மாநில அரசுகளுக்‍கும், மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சகம் சுற்றறிக்‍கை அனுப்பியுள்ளது. இதனிடையே, வாகன ஆவணங்களை புதுப்பிக்‍க, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்‍கப்பட வேண்டும் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ், மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00