பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்‍கப்பட்ட நிகழ்வு - பிரிட்டன் எம்.பி.யின் பேச்சுக்‍கு இந்தியா கடும் கண்டனம்

Sep 25 2021 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து தவறான கருத்துகள் விவாதிக்‍கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காஷ்மீரில் மனித உரிமை என்ற தலைப்பில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாஸ் ஷா என்பவர், சில தவறான கருத்துகளைத் தெரிவித்தார். 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தைக் குறிப்பிட்டு பிரதமர் திரு.மோடியை விமர்சித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் குறித்து மற்றொரு ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் தகாத கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வேதனை அளிப்பதகாவும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி எந்த அமைப்பு விவாதிக்க விரும்பினாலும், ஆதாரங்களுடன் கூடிய உண்மைகளையே முன்வைக்க வேண்டும் என்றும், பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00