மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்‍கு பணிந்தது ட்விட்டர் - உள்நாட்டு குறைதீர் அதிகாரிகளை நியமனம்

Sep 25 2021 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்‍கு பணிந்து, உள்நாட்டு குறைதீர் அதிகாரிகளை ட்விட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் மட்டும் கட்டுப்படாமல் இருந்தது. புதிய சட்டப்படி, உள்நாட்டை சேர்ந்த குறைதீர் அதிகாரிகளை அந்நிறுவனம் நியமிக்காததால், இந்தியாவில் வழங்கப்படும் சட்ட பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. மேலும், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்‍கு ட்விட்டர் நிறுவனம் கட்டுப்படாததால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் இடைக்கால பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய ஐடி விதிகளுக்கு இணங்க, உள்நாட்டைச் சேர்ந்த குறைதீர் அதிகாரிகள் 3 பேரை ட்விட்டர் நிறுவனம் நியமித்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் நிறுவனம் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறினால் சட்ட பாதுகாப்பை இழக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00