உத்தரப்பிரதேச மாநிலத்தை மிரட்டி வரும் டெங்கு காய்ச்சல் - மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Sep 18 2021 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, பல்வேறு மருத்துவமனைகளில் மக்‍கள் கூட்டம் அலைமோதுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மர்ம காய்ச்சலால் இதுவரை மாநிலம் முழுவதும் 88 குழந்தைகள் உட்பட 114 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் Firozabad மாவட்டத்தில் 60 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மேலும், கொசுக்‍களால் பரவும் மர்ம நோயால் 480-க்கும் மேற்பட்டோர் டெங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால் அம்மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். Firozabad மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மக்கள் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00