கொரோனா பரவல் முழுமையாக விலகாத நிலையில் திருவிழாக்‍கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கூடுவதை மக்‍கள் தவிர்க்‍க வேண்டும் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

Jul 25 2021 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் இன்னும் முழுமையாக விலகாத நிலையில், திருவிழாக்‍கள் உட்பட பொது இடங்களில் மக்‍கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்‍க வேண்டுமென, பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக்‍கொண்டுள்ளார்.

மன்-கி-பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றிய பிரதமர், ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த ஐசக்‍ முண்டா, தற்போது இணையத்தில் பிரபலமாகும் அளவுக்‍கு உயர்ந்துள்ளதைக்‍ குறிப்பிட்ட மோடி, ஒடிசாவின் பாரம்பரிய உணவு, வாழ்க்‍கை முறை, கலாச்சாரம் ஆகியவற்றை பதிவிட்டு, யூடியூப் சேனல் மூலம் வருவாய் ஈட்டி, மற்றவர்களுக்‍கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். இதேபோல், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி, மலைவாழ் மக்‍களின் மருத்துவ சிகிச்சைக்‍காக பிரத்யேக வாகனங்கள் இயக்‍கி வருவதை எண்ணி பெருமிதம் கொள்வதாகக்‍ குறிப்பிட்டார். பொது இடங்களில் அதிகம் கூடாமல் இருப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்‍கைகளை நாட்டு மக்‍கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் திரு. மோடி கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00