கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று தொடங்கவிருந்த கன்வார் யாத்திரை ரத்து - யாத்ரீகர்களுக்‍கு அனுமதியில்லை என ஹரித்துவார் நிர்வாகம் அறிவிப்பு

Jul 25 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இன்று தொடங்கவிருந்த கன்வார் யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில், யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை என ஹரித்துவார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை நடைபெறும். இந்த யாத்திரையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்லும் சிவபக்தர்கள், ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தளங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்துச் செல்வார்கள். இந்த கங்கை நீரை தங்கள் ஊர்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கன்வார் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு கன்வார் யாத்திரைக்கு அனுமதி அளித்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கன்வார் யாத்திரையை உத்தரபிரதேச அரசு ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மற்றும் டெல்லி அரசுகளும் கன்வார் யாத்திரைக்கு அனுமதி இல்லை என அறிவித்தனர். இன்று கன்வார் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், ஹரித்துவாருக்குள் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாத்திரைக்காக வழக்கமாக போடப்படும் கடைகளுக்கும் அனுமதியில்லை என்றும், கடைத்தெருக்கள் மூடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 6-ம் தேதி மாவட்ட எல்லைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிற சுற்றுலாத்தலங்களுக்கு செல்வோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00