கொரோனா குறித்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ள முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

Apr 8 2021 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் திரு. மோடி தலைமையில் இன்று நடைபெறும் முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பங்கேற்க மாட்டார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் தீவிரம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையை தடுப்பதில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும், அடுத்த 4 வாரங்களில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், கொரோனா நிலவரம் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்‍ கூட்டத்திற்கு பிறகு முக்‍கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக்‍ கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் திரு. மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. செல்வி மம்தா மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவருக்‍கு பதிலாக மாநில தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00