தெலங்கானா மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு சலுகை
Mar 8 2021 8:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தெலங்கானா ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் திரு. சந்திரசேகர ராவ் ஆகியோர் மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களுடன் திறமையாக போட்டியிடுவதாகவும், மக்கள் தொகையில் 50 விழுக்காடு உள்ள பெண்கள், சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் அதிசயங்களை நிகழ்த்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து பெண் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை விடப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.