நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடக்கம் : பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Mar 8 2021 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு, இன்று தொடங்குகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை, இந்தக் கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி, குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. ஃபிப்ரவரி மாதம் 1-ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஃபிப்ரவரி 15-ம் ‍தேதி முடிவடையவிருந்த முதல் கட்ட அமர்வு, இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஃபிப்ரவரி 13-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு, இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட‌ எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே, நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், நாளைமு‌தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00