புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் இன்று பெண் விவசாயிகள் தலைமையில் போராட்டம்

Mar 8 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச மகளிர் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு பெண் விவசாயிகள் தலைமையேற்கவுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 100 நாட்களையும் கடந்தும் தொடர்கிறது. போராட்டம் 100 நாட்களைக்‍ கடந்துவிட்டதைக்‍ குறிக்‍கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் Muzaffar nagar அருகே உள்ள Ramrajn பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் திரு. Rakesh Singh Tikait பங்கேற்றுப் பேசினார். சர்ச்சைக்‍குரிய 3 வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்‍கை என்றும் இக்‍கோரிக்‍கை நிறைவேறும்வரை தங்களின் போராட்டம் ஓயாது என்றும் திரு. Tikait உறுதிபடத் தெரிவித்தார். இந்தப் பேரணி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வழியே பயணித்து, வரும் 27-ம் தேதி காசிப்பூரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் களத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்தியப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து 3 பிரம்மாண்ட பொதுக்‍ கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் Sheopur பகுதியில் இன்றும், Rewa என்ற இடத்தில் வரும் 14-ம் தேதியும் Jabalpur-ல் 15-ம் தேதியும் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்‍ கூட்டங்களில் பாரதிய கிசான் சங்கத் தலைவர் திரு. Rakesh Tikait பங்கேற்கிறார். இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் துக்‍ கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினமான இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை பெண் விவசாயிகள் தலைமை ஏற்று நடத்துகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00