பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பில், மத்திய அரசுக்‍கும், மாநில அரசுக்‍கும் கணிசமாக நிதி கிடைக்கிறது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல்

Mar 5 2021 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பில், மத்திய அரசுக்‍கும் மாநில அரசுக்‍கும் கணிசமாக நிதி கிடைப்பதை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஒப்புக்‍கொண்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய பெண் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பாதையின் கொள்கை வழிகாட்டுதல் வகுக்‍கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் திறமைகளுக்‍கு வாய்ப்பு ஏற்படுத்திக்‍ கொடுக்‍கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு குறித்து அப்போது விளக்‍கமளித்த அவர், இந்த வரிகள் மூலம் மத்திய அரசுக்‍கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைப்பதை ஒப்புக்‍கொண்டார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயில் மாநிலங்களுக்‍கு 41 சதவீதம் பங்குத்தொகை கிடைப்பதால், இந்த வரிகளை குறைக்‍க மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்துதான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00