புகழ்பெற்ற தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்‍கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

Mar 4 2021 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாஜ்மஹாலுக்‍கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்‍கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தாஜ்மஹாலை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நினைவுச்சின்னத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறையின் அவசர உதவி எண்ணான 112-க்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய நபர், ராணுவ ஆட்சேர்ப்பில் முறைகேடு நடந்ததாகவும், ராணுவத்திற்கு தாம் தேர்வு செய்யப்படவில்லை என்றும், தாஜ்மஹாலில் ஒரு குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் கூறியதாக ஆக்ரா எஸ்.பி சிவ் ராம் யாதவ் தெரிவித்தார். இதையடுத்து, தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தாஜ்மஹால் பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வெடிகுண்டு செயலிப்பு நிபுணர்கள் வரவழைக்‍கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00