உத்தரகாண்ட் வெள்ளம்- 72 பேரின் உடல்கள் மீட்பு : 30 சிதிலமடைந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன

Feb 27 2021 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரகாண்ட் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களில் இதுவரை 72 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.

நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் வேலைப்பார்த்த பணியாளர்களில் பலர் தண்ணீரில் மூழ்கியும், மண்ணில் புதைந்தும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 205 பேர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், இதுவரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 30 சிதிலமடைந்த உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00