நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் - இஸ்ரோ வரலாற்றில் மிக முக்கிய செயல்பாடு என சிவன் பெருமிதம்
Feb 27 2021 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய விண்வெளிய ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து, கவுண்டவுன் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி- 51 ராக்கெட் நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. வரிசையில் ஏவப்படும் 53-வது ராக்கெட்டான இதன் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து, 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட் மூலம் பிரசில் நாட்டை சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான அமேசானா-1 மற்றும் 18 இணை பயணிகள் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இணை பயணிகள் செயற்கைக் கோள் மீது பிரதமர் திரு. மோடியின் படம் மற்றும் மின்னணு வடிவிலான பகவத் கீதையும் விண்ணுக்கு செலத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் திரு. சிவன், இஸ்ரோ வரலாற்றில் இது மிக முக்கிய செயல்பாடு என பெருமிதம் தெரிவித்தார்.