நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி - 3 ஆயிரம் மையங்களில் வழங்க ஏற்பாடு
Jan 16 2021 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, உரியநேரத்தில் தடுப்பூசி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
மனித குலத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா எனும் பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணியை முதலில் பிரிட்டன் தொடங்கிய நிலையில் பல்வேறு நாடுகளும் வழங்கி வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவின் சீரம் மற்றும் ஆக்ஸ்ஃபோடு இணைந்து தயாரித்த கோவிஷீல்டு, ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் தயாரித்த கோவோக்சின் தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை பிரதமர் திரு. நரேந்திரமோடி, டெல்லியிலிருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார். சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்றும், நாடு முழுவதும் 3 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திரமோடி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி பணியை இந்தியா தொடங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 2 டோஸ்களை அவசியம் போட வேண்டும் என அறிவுறுத்திய அவர், கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் தடுப்பூசிகள் அனைத்து சூழலுக்கும் ஏற்றவை என்றும், ராணுவ வீரர்கள், காவல்துறையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி தயாரிப்பில், களைப்பற்ற உழைப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.