நடப்பாண்டிற்கான மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கிடையாது - தனியார் மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Nov 27 2020 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் தமிழக அரசின் அரசாணை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில், சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு, இந்த ஆண்டு, 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பித்தது. தற்போதையே நிலையிலேயே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவித்தது.