டெல்லியில் புதிதாக 5 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 91 பேர் பலி
Nov 27 2020 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் புதிதாக 5 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 937 பேர் குணம் அடைந்த நிலையில், 91 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 51 ஆயிரத்து 262 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தொட்டது. தொற்று பாதிப்புடன் 38,734 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 811 ஆக உள்ளது.