கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது - டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்
Nov 27 2020 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு 8 மாதங்களை கடந்து விட்ட நிலையில், தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் தலைக்காட்ட துவங்கியது. இதனால் அம்மாத இறுதியில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்குகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்க முடியாமல் பல மாநில அரசுகளும் திணறி வருகின்றன. இந்த கல்வியாண்டின் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளிலேயே கழிந்துவிட்டது. குறிப்பாக கோடிக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், திரு. சத்யேந்தர் ஜெயின் தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், பள்ளிகளும் அதன்பிறகே திறக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.