நிவர் புயலால் புதுச்சேரியில் 400 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் - மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 50 கோடி வழங்க வேண்டி கடிதம் எழுதவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

Nov 27 2020 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்த நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை துறையின் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறை செயலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. நாராயணசாமி, முதல் கட்ட புயல் சேத கணக்கெடுப்பில், புதுச்சேரியில் 820 ஹெக்டேர் நெல் விவசாய நிலங்களும், 200 ஹெக்டேர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டேர் கரும்பு தோட்டங்களும், 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 55 ஹெக்டேர் வாழை தோட்டங்களிலிருந்து வாழை மரங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது உத்தேசமாக 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்‍கை விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00