பாலியல் வன்கொடுமைக்‍கு உள்ளாக்‍கப்பட்டு இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் - பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார் பிரியங்கா காந்தி

Oct 1 2020 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்‍கு உள்ளாக்‍கப்பட்டு இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்‍க திருமதி. பிரியங்கா காந்தியும், திரு. ராகுல் காந்தியும் இன்று ஹத்ரஸ் மாவட்டம் செல்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் மாவட்டத்தில், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்திய 4 பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாகத் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து எடுத்து சென்ற போலீசார், குடும்பத்தினரின் அனுமதியின்றி உடலை நேற்று அதிகாலை 3 மணி அளவில் தீயிட்டு எரித்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பெண்ணின் சடலத்தை அனுமதியின்றி எரித்த போலீசார் மீது உடனடி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்‍கு பெண் வழக்‍கறிஞர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத் பதவி விலக வேண்டும் என்று திருமதி. பிரியங்கா காந்தி வலியுறத்தியுள்ளார். இதனிடையே, கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க திருமதி. பிரியங்கா காந்தியும், திரு. ராகுல் காந்தியும் இன்று ஹத்ரஸ் மாவட்டம் செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00