2ஜி முறைகேடு மேல்முறையீட்டு வழக்‍கு - அக்டோபர் 5-ம் தேதிமுதல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினமும் விசாரணை

Sep 29 2020 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான 2ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கு விரைந்து விசாரிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வரும் 5ம் தேதிமுதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மத்தியில், கடந்த 2007-2008ம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்‍கிய முற்போக்‍கு கூட்டணி ஆட்சியின்போது, விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்‍கீடு செய்ததில், அரசுக்‍கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்‍கையில் கூறப்பட்டது. இதுகுறித்த வழக்‍கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆ.ராசா ஒதுக்‍கீடு செய்த 2ஜி ஸ்பெக்‍ட்ரம் உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு ரத்து செய்தது. ஸ்பெக்‍ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ தனியாக வழக்‍கு தொடர்ந்தது.

கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தனியே வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்‍கில் கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்தது.

இதேபோல், அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கிலும், ராசா, கனிமொழி உட்பட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டு சி.பி.ஐ மற்றும் அமலாக்‍கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்‍குகள் தாக்‍கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்‍களை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தியின் பதவிக்‍காலம் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த மனுக்‍களை விரைந்து விசாரிக்‍கக்கோரி மனுத்தாக்‍கல் செய்யப்பட்டது. இந்த வழக்‍கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீட்டு வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும் என தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 5ம் தேதிமுதல், இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00