பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் இளம்பெண் உயிரிழப்பு - கைது செய்யப்பட்ட 4 பேர் மீது கொலை வழக்கு

Sep 29 2020 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில், கடந்த 14-ம் தேதியன்று, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளம்பெண், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஹாத்ரஸ் மாவட்டத்தின், சண்ட்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண், கடந்த 14-ம் தேதி, அதே கிராமத்தை கிராமத்தை சேர்ந்த 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மேல் சிகிச்சைக்காக நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி, இன்று அவர் உயிரிழந்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுமென ஹாத்ரஸ் எஸ்.பி. தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் திருமதி.பிரியங்கா காந்தி, செல்வி.மாயாவதி, திரு.அகிலேஷ் யாதவ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களை செய்வதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00