கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு - விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

Sep 27 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வழக்கமாக மருத்துவத்திற்கு தேவைப்படும் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நாளொன்றுக்கு 750 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 800 டன் வரை தேவை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெருந்தொற்றுக்கு மத்தியில் நாட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஆறு மாதங்களுக்கு அதன் விலையைக் கட்டுக்குள் வைக்கவும், விலை உயர்வைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை ஆணையம் தெரிவித்துள்ளது. பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விலையைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00