பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கு - நடிகை தீபிகா படுகோனேயிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை

Sep 26 2020 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில், நடிகை தீபிகா படுகோனிடம், சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில், சிபிஐ, அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் விநியோகித்தது, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட புகார்களின் கீழ், நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல நடிகைகளின் பெயர்களை அவர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில், நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் நேற்று ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், நடிகைகள் ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலிகானிடம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகரும் தயாரிப்பாளருமான ரவி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00