தினமும் அடித்து துன்புறுத்திய கணவனை கொன்ற மனைவி : ராஜஸ்தானில் பரபரப்பு

Sep 24 2020 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தினமும் அடித்து துன்புறுத்திய கணவனை கொன்ற மனைவி, உடலை 28 மணி நேரத்திற்கு படுக்கையின் கீழே மறைத்து வைத்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள ஹமீர்வாஸ் நகரை சேர்ந்தவர் நிர்மல் சிங். இவரது மனைவி நீரஜ். நிர்மல் சிங் தினமும் இரவில் தனது மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிறு இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமுற்ற நீரஜ், கயிறு ஒன்றால் கணவரின் கழுத்தில் இறுக்கியதில் நிர்மல் உயிரிழந்து விட்டார். இதனால் பயந்துபோன அவரது மனைவி, நிர்மலின் உடலை படுக்கையின் கீழே மறைத்து வைத்து விட்டார். இதன் பின் நிர்மலை தேடி அவரது வீட்டுக்கு சகோதரர் அசோக் சிங் ஜாட் வந்துள்ளார். 28 மணிநேரத்திற்கு மேலாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசவே, நிர்மல் கொல்லப்பட்ட விவரம் தெரிய வந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலின் மனைவி நீரஜை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00