நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் வேளாண் மசோதா நகல் கிழித்தெறிப்பு - அவைத்தலைவர் மேஜையின் மைக்கையும் உடைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி - பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி முதல் வேளாண் மசோதா நிறைவேற்றம்

Sep 20 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற மாநிலங்களவையில், வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகல் கிழித்தெறியப்பட்டதுடன், அவைத்தலைவர் இருக்‍கையில் இருந்த மைக்‍ உடைக்‍கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. எதிர்க்க்டசிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் விளை பொருள் விற்பனை மற்றும் வணிக மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இவை விவசாயிகளுக்‍கு எதிரானது என எதிர்க்‍கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேளாண் மசோதாக்‍களை மத்திய வேளாண் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்‍கல் செய்தார். இந்த மசோதாக்‍கள், விவசாயிகள் வாழ்வில் மாற்றத்தைக்‍ கொண்டுவரும் என்றும், நாட்டில் யாருக்‍கு வேண்டுமானாலும் தங்களுடைய விளைப்பொருட்களை விவசாயிகள் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, வேளாண் மசோதாவுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. திரு.டேரிக் ஓ பிரையன், மசோதாவின் நகலை கிழித்தெறிந்தார். அவைத்தலைவர் இருக்‍கையில் இருந்த மைக் உடைக்‍கப்பட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00